மேற்கு வங்கத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், கொல்கத்தாவில் உள்ள அலிபூர் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கம் மற்றும் புலிகளுக்கு ஆட்டிறைச்சி உணவாக வழங்கப்பட்டு வருகிறது. பாஜக அரசின் இந்தத் தடையால் பூங்கா நிர்வாகம் கூடுதல் செலவை எதிர்கொண்டுள்ளது.
முன்பு எருமை மாட்டிறைச்சி கிலோ ரூ. 285-க்குக் கிடைத்து வந்த நிலையில், தற்போது ஆட்டிறைச்சி கிலோ ரூ. 726 என்ற விலையில் வாங்கப்படுவதால் பராமரிப்புச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


