கரப்பான் ஜனதா கட்சி தனது இணையதளம் மூலம் நாடு தழுவிய அளவில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. தற்போது இந்தப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல் அடிமட்ட மக்களிடையே நேரடியாகச் சென்று பணியாற்ற அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
வேலையின்மை, கல்வி முறைக்கேடுகள் மற்றும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'கயா போல்தி பப்ளிக்' என்ற பெயரில் பிரசாரத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



