தமிழகத்தில் நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முறையை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மாநில அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவில் பிற மாநில மாணவர்களுக்கு இணையாகப் போட்டியிடும் வகையில் இந்த மாற்றங்கள் அவசியமென கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்துடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவது, புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்துவது மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளையும் அரசு அறிவித்துள்ளது.
மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுக்களை மறுசீரமைக்கவும், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்களில் கல்வியாளர்களை அரசு பிரதிநிதிகளாக நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


