பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நில மோசடி வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீன் நேற்று ரத்தானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை இன்று கைது செய்தனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


