தென்னக ரயில்வேயில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, நெல்லை மற்றும் குமரி வழித்தடத்தில் இயக்கப்படும் 7 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இதனால், குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848) ரயில், ஆகஸ்ட் 8, 9, 10, 11, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். இந்த மாற்றத்தினால் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது. இதற்கு மாற்றாக மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் கீரனூர் ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



