மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்தில் பணி நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





