மத்திய அரசு நிர்ணயித்துள்ள வரம்புகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டிற்கான கடன் மற்றும் திருப்பிச் செலுத்துதல் மதிப்பீடுகளை மாநில அரசு இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்த நிதியாண்டில் ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியைத் திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக் கடன் மற்றும் பொதுக் கணக்கு பொறுப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியே இந்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பொதுக் கடன் மற்றும் பொறுப்புகளின் நிகர உயர்வு ரூ.1,20,964 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது; இது இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட ரூ.1,21,653 கோடியை விடக் குறைவு. வரும் 2027 மார்ச் 31 நிலவரப்படி, மாநிலத்தின் மொத்தக் கடன் பொறுப்புகள் ரூ.10,98,768 கோடியாக, அதாவது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 27.01 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் மத்திய அரசின் திட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, பொதுக் கடன் ரூ.9,523 கோடி குறையும். கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்த விகிதம் 2027-28 நிதியாண்டில் 26.57 சதவீதமாகவும், 2028-29 நிதியாண்டில் 26.10 சதவீதமாகவும் குறையும் என அரசு கணித்துள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




