சென்னை மாநகரப் பேருந்தின் பின்புறம் உள்ள வழித்தடப் பலகையில் (Route Board) 'தக்காளி வெற்றிக்கழகம்' என தவறான வாசகம் இடம்பெற்றிருந்தது. இது மர்ம நபர்களால் மாற்றப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கம்.
இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில், பேருந்துகளில் உள்ள டிஸ்ப்ளே பலகைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
1விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்



