தாய்லாந்தின் பேங்காக் நகருக்கு வடக்கே உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிரியர் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். பேங் குவாய் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரும் உயிரிழந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பிளை பேங் துணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் லெப்டினன்ட் கர்னல் பாசாகோர்ன் சைதாவ்வோங் கூறுகையில், உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்டது அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தாக்குதலுக்கான பின்னணி குறித்து மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




