யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் வருவாய் ஈட்டுவதற்கான தகுதி வரம்புகளை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதன்படி, சேனல் தொடங்குபவர்கள் 1,000 சந்தாதாரர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், கூடுதல் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
புதிய விதிகளின்படி, கடந்த 12 மாதங்களில் 8,000 பொதுக் காட்சி நேரங்கள் (Watch Hours) அல்லது கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் ஷார்ட்ஸ் (Shorts) பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் 2027 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


