அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள், அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அந்த இடத்தை முதலில் மாற்றியவர் செங்கோட்டையன் தான் என்பதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இருவருக்கும் இடையே இந்த கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.


