சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளில் உள்ள 32 இடங்களில், இலவச வைஃபை இணைய சேவை சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் பொதுமக்கள் இந்த இலவச இணைய வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.



