ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி, தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ. 40 லட்சம் பணம் பறித்ததாகக் கூறப்படும் புகாரில், காவல் ஆய்வாளர் முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைதான இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



