நடிகர் விக்ரம் குட்டி குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் விக்ரமின் முடியைப் பிடித்து குரங்கு சேட்டை செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் குரங்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த லார் கிப்பன் இனத்தைச் சார்ந்தது என்றும், இதைச் செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமானது என்றும் கூறப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவிலிருந்து மணிப்பூர் மற்றும் ஈரோடு வழியாக, விக்ரமின் சம்மந்தியும் கேவின் கேர் நிறுவனருமான சி.கே. ரங்கநாதனின் சென்னை இல்லத்திற்கு இந்தக் குரங்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக வனவிலங்குத் துறை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளது. வனத்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் அந்த வீடியோ பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2F2-2026-08-10-15-50-57.jpg&w=3840&q=75)