சென்னை குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த ராஜஸ்ரீ (18) என்ற மாணவி, ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சீனிவாசன் - கோமதி தம்பதியின் மகளான இவர், காட்டாங்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலச் சேர்ந்திருந்தார். கல்லூரியின் முதல் நாள் வகுப்பிற்குச் செல்வதற்காக இன்று காலை அவர் புறப்பட்டார்.
வீட்டின் அருகே இருந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2F2-2026-08-10-15-50-57.jpg&w=3840&q=75)


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)