ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக தமிழக அரசு புதிய குழுவை அமைத்துள்ளது. இதற்கான உத்தரவை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.
பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி கே.இராமநாதன் துணைத் தலைவராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சம்பத், ஆன்மிகப் பேச்சாளர் சுமதிஸ்ரீ மற்றும் பின்னணிப் பாடகர் டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர் மற்றும் செயலராகச் செயல்படுவார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
