தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் தலைமையில் புதிய குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த உள் இடஒதுக்கீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, தேவைக்கேற்ப உயர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்த இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்று வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் கூடுதல் வாய்ப்புகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய குழுவின் பரிந்துரைகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
