காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் காவிரி ஆற்றில் இருந்து திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீர் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதத்தில் 45.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டிய நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. நடப்பு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 88 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
