ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்களுக்கு அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக தமிழக அரசு புதிய குழுவை அமைத்துள்ளது. பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமையில் இந்தக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிகப் பேச்சாளர் சுமஸ்ரீ, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சம்பத், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே. இராமநாதன், மருத்துவர் த. வேலுமுருகன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் துணைத் தலைவராக டாக்டர் கே. இராமநாதன் செயல்படுவார் என அரசு செயலாளர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

