முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சுமார் 4,000 மெகாவாட் சூரியசக்தி மின் திட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக இந்திய சூரியசக்தி சங்கத்தின் தலைவர் சி. நரசிம்மன் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, விருதுநகரில் 1,750 மெகாவாட் திறன் கொண்ட துணை மின்நிலையத் திட்டம் திமுக அமைச்சர்களால் விற்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இது போன்ற புகார்கள் எழுந்ததையடுத்து, தற்போதைய அரசு அந்தத் திட்டங்களை நிறுத்தி வைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அரசு அனுமதியைப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிரதமர் சூரிய வீடு (PM Rooftop Solar) திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மின் இணைப்புகளுக்கு கூடுதலாக ரூ. 22,000 மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 60 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாகவே உள்ளது. சூரியசக்தி பேனல் உற்பத்தி குறித்துப் பேசிய நரசிம்மன், இந்தியா தற்போது 65 ஜிகாவாட் சூரிய மின்கலங்கள் மற்றும் 161 ஜிகாவாட் சூரிய மாட்யூல்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
தேவைக்கேற்ப மின்கலங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், தற்போது இறக்குமதிக்குத் தடை நீக்கப்பட்டு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2F2-2026-08-10-15-50-57.jpg&w=3840&q=75)