தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசுக்கு எவ்வித கூடுதல் செலவும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டு வரலாம் என அவர் தெரிவித்தார்.

