நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் களத்தில் ராகுல் காந்தி இருப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆவேசமாகப் பேசிய உறுப்பினர்களைப் பார்த்து, 'என்ன சண்டைக்கு வர்றீங்களா?' என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி எழுப்பினார். மேலும், அவர்களை அமருமாறு அவர் அறிவுறுத்தினார்.

