இந்தியாவில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) அறிக்கையின்படி, 2023-24 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 10,45,015 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 62,17,351 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில வாரியாக மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

