சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், அவையின் கண்ணியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துகளை உடனுக்குடன் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, அவை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே சபாநாயகர் ஆலோசனையுடன் கண்ணியமற்ற கருத்துகள் நீக்கப்பட்டு வந்தன. தற்போது நேரலை முறை அமலில் உள்ளதால், அவை நடவடிக்கைகளின் போதே சபாநாயகர் ஆலோசித்து அத்தகைய கருத்துகளை நீக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

