வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தும் தீர்மானத்தை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தாக்கல் செய்தார். 21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கூட்டுக்குழுவை அமைப்பதற்கான இந்தத் தீர்மானம் அவையில் முன்மொழியப்பட்டது.
இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, மக்களவை அமர்வுக்கு ஜகதம்பிகா பால் தலைமை தாங்கினார்.


