ஒரேக்கிள் நிறுவனம் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களை அடையாளம் காணுமாறு தனது மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் சுமார் 21,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தில் 1,41,000 முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தகவலை ஒரேக்கிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சில குழுக்களில் கணிசமான அளவில் பணிநீக்கங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஒரேக்கிள் நிறுவனம் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. இதற்காக 2026-ஆம் நிதியாண்டில் 55.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் மூலதனச் செலவாக ஒதுக்கியுள்ளது. கிளவுட் வருவாய் அதிகரித்தாலும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான முதலீடுகள் மற்றும் கடன் சுமை காரணமாக, செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒரேக்கிள் மேற்கொண்டு வருவதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.


