ஏர்டெல் நிறுவனம் தனது சில குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரூ.299, ரூ.319, ரூ.579, ரூ.619, ரூ.649 மற்றும் ரூ.799 ஆகிய ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.859 மதிப்பிலான திட்டத்தின் விலை ரூ.899 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


