கோவையில் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதன் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
மாணவர் படுகொலை குறித்து வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவையில் பேசுவதாக உதயநிதி தன்னிடம் தெரிவித்ததாக அமுதனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.



