நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்திலிருந்து தங்க நகைகளைத் திருடிய இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சடலத்தை மரக்கட்டையைப் பயன்படுத்தி கரைக்கு இழுத்த மதன் குருங் மற்றும் உமேஷ் சௌதரி ஆகிய இருவரும், மனிதாபிமானமற்ற முறையில் சடலத்திலிருந்த தங்கக் காதணிகள், செயின் மற்றும் வளையல்களைத் திருடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




