சட்டமன்றக் கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் மற்றும் நேரு ஆகியோரின் பெயர்கள் விடுபட்டிருப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில் இத்தகைய பிழைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.


