மதுரையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த எஃப்.க்யூ.எல் (FQL) நிதி மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இரண்டாவது நாளாக காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்து வருகின்றனர்.
மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள், பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்ற பேராசையில் ஏமாந்து பல கோடி ரூபாயை இழந்துள்ளனர். இதுவரை சுமார் 7,000 பேர் இந்த மோசடி தொடர்பாகப் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



