கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் வசித்து வந்த தற்காலிகக் குடியிருப்பில், அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தினால் அப்பகுதியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் தீப்பிடித்து முழுமையாக எரிந்து சாம்பலாகின.
சம்பவம் நடந்த நேரத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். இதனால் பெரும் உயிர்ச்சேதமோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

