சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் வீரக்கலையான ஏறுதழுவுதலை இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என விமர்சித்தது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்க்கரை ஆலைக்கு நிதி கோருவதற்காக ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டை இழிவுபடுத்திப் பேச வேண்டிய அவசியம் என்ன என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



