ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிலம் சிறப்பு வரன்முறை திட்டத்தை, ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். ஆட்சேபனைக்குரிய நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


