தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என செஃப் தாமு தெரிவித்துள்ளார். தான் நலமாக இருப்பதாகவும், தேவையற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை நேரத்தில் ஊசி செலுத்திக்கொண்டதால், தனியார் நிகழ்ச்சி ஒன்றின் அரையிறுதிப் போட்டியில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் தான் பங்கேற்க இருப்பதாகவும், மீண்டும் அனைவரையும் சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


