சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சிலை அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் டி. சீனிவாசன், கார் மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு பாதுகாப்புப் பணிக்காக அவர் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


