மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 90.07 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 52.73 டி.எம்.சி.யாக உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு 6,702 கன அடியிலிருந்து 7,022 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

