நாகை வேளாங்கண்ணி திருவிழாவின் போது, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் பலூன்கள் பட்டாசு தீப்பொறி பட்டதால் வெடித்துச் சிதறின. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த இடத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


