திமுக மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர்கள் தங்களின் கடந்த கால கொள்கை விளக்கக் குறிப்புகளை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் வலியுறுத்தியுள்ளார். அக்கட்சியின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது நிதர்சனமான உண்மை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமன்றத்தில் துறை சார்ந்த கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் வாசிக்கும்போது, திமுகவினர் அவையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார்களா என ரூபி மனோகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


