சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.1,15,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.14,385 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை தினமும் மாற்றமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக விலையில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு, வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,370-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
