அவசியமின்றி தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் காணொளி வாயிலாக அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிலேயே திருமணங்களை நடத்தும் 'வெட் இன் இந்தியா' (Wed in India) இயக்கத்தை ஊக்குவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதையும், பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும், சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


