டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் பதிவு செய்வதற்காக, புதிய கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 31, 2026 முதல் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 1800-889-2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது +91-7397720230 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும், பேஸ்புக், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும், தீர்வு காணப்படுவதையும் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


