நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளது. இந்த பேரிடரில் சிக்கியுள்ள 4,000-க்கும் மேற்பட்டவர்களின் நிலை குறித்துத் தகவல் இல்லாததால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22,000 பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


