அமெரிக்காவில் H1B விசா பெற்று பணிபுரிபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் H4 விசாவின் கீழ், அவர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்வதைத் தடை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, H4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த விதியை மாற்ற அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், H4 விசா வைத்திருப்பவர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.


