தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய ஆறு இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அவர், மாநிலத்தின் மருத்துவக் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
