சென்னை எழும்பூரில் விவசாய உபகரணங்களுக்கு அரசு ஆதரவு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகளுக்கான உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, சொந்தமாக டிராக்டர் வசதி இல்லாத விவசாயிகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது போன்ற திட்டத்தின் அடிப்படையில் டிராக்டர்களை அரசு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
