சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்றார். டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான அலுவல் பணிகளுக்காக அவர் அங்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இந்த மாத இறுதியில் முதலமைச்சர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை அவர் மேற்கொண்டார்.



