திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் வன நிலத்தைப் பட்டா செய்து தருவதாகக் கூறி, மலைவாழ் மக்களிடம் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மூன்று வனச்சரக அலுவலர்கள் உட்பட ஆறு வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F05%2Fknnehruprotest-2026-09-05-08-37-55.jpg&w=3840&q=75)

