கோயம்புத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற நபரிடமிருந்து தெருநாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.
அதிகாலை 2 மணியளவில் சாலையோரம் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் நபர் ஒருவர் அத்துமீற முயன்றார்.
அந்தப் பெண் அலறிய சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த தெருநாய், அந்த நபரைத் துரத்திச் சென்று கடித்தது. நாயின் இந்தச் செயலால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதன் மூலம் அந்தப் பெண் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F05%2Fknnehruprotest-2026-09-05-08-37-55.jpg&w=3840&q=75)

