கேரள மாநிலம் திருச்சூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இந்த விபத்தில் சிக்கியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



